கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. விலகல்! (மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக்கு பிறகு விஜயகாந்த் அதிரடி அறிக்கை)

சென்னை, மார்ச்.10
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக தே.மு.தி.க. தலை
வர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
2011 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் 7.9 சதவீத வாக்கு
களையும் பெற்றது.
ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3வது அணியான மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்த
லில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்
பெற்றது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும், தொகுதி பங்கீட்டு
பேச்சு வார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. அதிருப்தியில் இருந்து வந்தது. பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க. அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது.
இது தே.மு.தி.க.வை எரிச்சலடைய வைத்தது. பா.ம.க.வை விட
தங்களுக்கு கூடுதல் இடம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியது.
ஆனால், அதை அ.தி.மு.க. பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்பிறகு, தேமுதிக 25 தொகுதிகள் வரை இறங்
கியது. ஒருக்கட்டத்தில் அதிமுக 15, 13 என்று தொகு
திகள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே செல்ல, தேமுதிக அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. கூட்டணியில் தொட
ரலாமா? என்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளி
யிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சு
வார்த்தை நடந்தது.
தேமுதிக கேட்ட தொகுதி எண்ணிக் கையையும், தொகுதிகளையும் அதிமுக ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அமுதிக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.