தூத்துக்குடி, பிப்.18
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் முன்பாக 6வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனி
சாமி தொடங்கினார்.
அப்போது, அவர் பேசுகையில்;-
திமுகவிற்கு பெட்டி வாங்கியே பழக்கம். அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தன்
னோடு பெரிய பெட்டி
யினை கொண்டு செல்
கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார். வறட்சியால், மழை
யால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதற்கான கடனை தான் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.
அதில் என்ன தவறு. முதல்வரை விஷக்கிருமி என்று ஸ்டாலின் கூறுகிறார்.
அதிமுக அரசு எம்எல்ஏ.க்கள் அமைச்சர்கள் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 9,70,000 மனுக்கள் அதிமுக சார்பில் வாங்கப்
பட்டது. அதில், 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைத்தது. கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் உறுதியளித் துள்ளார்.
என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதனைஸ்டாலின் மாற்றி சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றேஅரசை குறை
கூறி வருகிறார். விவசாயிகள் விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
திமுக ஆட்சியில் ஒன்னும் கிடையாது. தண்ணீர் வீணாவதைத் தடுக்க தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார் திருநகரி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் இருந்த மின் தடையை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறது என முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
