கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு-60 இடங்களில் ‘ரெய்டு’! (ரூ.811 கோடி டெண்டர் முறைகேடு விவகாரம் கோவை, சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டை)

சென்னை, ஆக.11
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மேலும் 10 இடங்கள் சேர்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மொத்தமாக சோதனை நடக்கும் இடங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் நேற்று அதிகாலையில் இருந்து சோதனை நடந்தது.
காலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது. இந்த சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே.சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட் டுள்ளது.
சென்னையில் மட்டும் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மொத்தம் 40 இடங்களில் சோதனை
நடந்தது. கோவையில்தான் எஸ்.பி வேலுமணிக்கு நண்பர்கள் பலரும், சொந்த இடங்கள் நிறையவும் இருந்ததால் அங்கு சோதனை மேற் கொள்ளப்பட்டது.
அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும், காஞ்சிபுரத்தில் இரண்டு இடத்தில் சோதனை நடந்து கொண்டு இருக்
கிறது. ஆதாரம் சிக்க சிக்க சோதனை செய்யும்
இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 55 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 9 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் கோவையில் இவரின் வீடுகளில் கண்டு
பிடிக்கப்பட்ட ஆவணங்கள், இவரின் உறவினர் நண்பர்களின் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள், அவ
ரின் அலுவலகலங்களில் கிடைத்த ஆவணங்கள் இதை வைத்து சோதனை செய்யும் இடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்
பட்டுள்ளது.
முக்கியமாக சென்னையில் ஒரு பிரபல சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை இவர் வாங்கியதாக சோதனையின் போது கண்டு
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கும் இது தொடர்பாக சோதனை நடத்த அதிகாரிகள் விரைந்தனர். கிடைத்த ஆதாரங்களை வைத்து சோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்கிறார்கள். சோதனை இன்னும் முடியவில்லை.
இதனிடையே எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில். எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடாக நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை விதிமீறி செயல்படுத்தி உள்ளார். . சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெண்டர் ஒதுக்குவதில் ஏராள
மான முறைகேடு ஏற்பட்டுள்ளது என்பதால் அது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்
யூட்டர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
டாப் சீக்ரெட்டாக இந்த சோதனையை திட்டமிட்டு முறையாக நடத்தி வருகிறார்கள். நேற்று அதிகாலை வர லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே இந்த சோதனை குறித்து பலருக்கும் தெரியாது. சில உயர் அதிகாரிகள் மட்டுமே இதை பற்றி அறிந்திருந்தனர்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய மிகப்பெரிய ரெய்டுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிமுகவினர் இடையே இந்த சோதனை கொஞ்சம் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தமாக ஆதாரங்களை திரட்டியபின் மேலும் சில பிரிவுகளின் கீழ் எஸ்.பி வேலுமணி மீது வழக்குகள் பதியப்
படலாம். அதேபோல் மேலும் சிலரும் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்படலாம்.
எஸ். பி வேலுமணிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட் வழக்கில் இந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வாய்ப்பு உள்ளதால் விரைவில் அந்த வழக்கிலும் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.