கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக.25
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர்
ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நினைவிடம் அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் “நவீன தமிழகத்தை” உருவாக்கும் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் மெரினாவில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 24, 2021) அறிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினை
விடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் தெரிவித்தார்.
சமூக நலன், போக்குவரத்து, இலக்கியம், கல்வி, நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த ஸ்டாலின் தனது தந்தையை “நவீன தமிழகத்தின் சிற்பி” என்று பாராட்டினார்.
“சுமார் அரை நூற்றாண்டு வரை தலைப்புச் செய்திகளில் நிரந்தரமாக இருந்த கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் நாளன்று நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்
டார்” என்று கருணாநிதி குறித்து ஸ்டாலின் கூறினார்.
அவர் இறப்பதற்கு முன்பு அவர் தமிழ் சமூகத்திற்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். தாய் தமிழகத்திற்காக அவர் செய்த மகத்தான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவருடைய சாதனைகளை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் விதத்திலும் அண்ணா நினைவிடம் (திமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் அண்ணாதுரை) வளாகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிட வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிறுவகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிஎன் அண்ணாதுரைக்கு காமராஜர் சாலையில் நினைவிடம் உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்படும் 2.21 ஏக்கரில் அமைக்கப்படும் நினைவிடத்தில் நவீன சித்திர விளக்கங்கள் இடம் பெறும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.