பெங்களூரு, ஆக.09&
காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கன அடி நீரும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன
அடி நீரும் திறக்கப்
பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்
தின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்
துக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்
பட்டுள்ளது.
இது நேற்று முன்
தினம் வரை 1.19 லட்சம் கன அடியாக இருந்தது. தற்போது, கே.ஆர்.எஸ்
அணையில் இருந்து 73,000 கன அடி நீர் திறப்பும், கபினி அணையில் இருந்து 70,000 கன
அடி நீரும் திறக்கப்
பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்
தின் காவிரி நீர்ப்
பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக குடகு மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பி
யுள்ளன.
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ்.அணையில் நேற்று மாலையில் 116.30 அடிக்கு நீர்
இருந்தது. அணை
யில் இருந்து விநா
டிக்கு 15,000 கன அடி
தண்ணீர் திறக்கப்பட்
டுள்ளது.
அணைக்குவரும் நீரின் அளவு வினா
டிக்கு 55,563 கன
அடியாக உள்ளது. கர்நாடக அணை
களின் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வியாழன் முதல் வரத் தொடங்கி யுள்ளது.
நீர்வரத்து அதிக
ரிப்பதால் மேட்டூர் அணையின் நீர்
மட்டம் வெள்ளிக்
கிழமை 67.97 அடி
யாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணை
யின் நீர்மட்டம் 70.05 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது, மேட்டூர் அணையில் 32.74 டி.எம்.சி. நீர் இருப்பு தற்போது உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000
கன அடி நீர் திறக்கப்
படுகிறது. ஒகேனக்
கல்லில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக இருந்தது.
ஒகேனக்கல்லின் அனைத்து அருவி
களிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
அருவிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
