சென்னை, நவ.26
நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், காஞ்சி, சென்னை, நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
