கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா விதி மீறல்களுக்கு கடுமையாகிறது தண்டனை! (தமிழக அரசின் புதிய சட்டம் கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்)

சென்னை, செப்.05&
சீனாவில் இருந்து உலகில் பல்வேறு நாடுக
ளுக்குப் பரவியுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 30
லட்சத்திற்கும் அதிகமான
மக்கள் பாதிக்கப்பட்
டுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிக
மான மக்கள் பாதிக்கப்
பட்டுள்ளனர். இந்த கொடூர
தொற்றைத் தடுக்க அரசு
பல்வேறு நடவடிக்கை
களை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ
கத்தில் கொரொனா விதி
முறைகளை மீறுபவர்
களுக்குத் தண்டவையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் தமிழகம்
முழுவதும் அமல்படுத்தப்
பட்டது. இதனால் பொது
போக்குவரத்து, நிறுவ
னங்கள், கடைகள் என
அனைத்தும் மூடப்
பட்டன.
இந்த ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்
வாதாரத்தை இழந்து கஷ்டப்படுவதாக கருத்து எழுந்தது. ஆனாலும் ஊரடங்கை தவிர கொரோனாவை விரட்ட பெரிய ஆயுதம் வேறு இல்லை என அரசு பலமாக நம்பியது. இதனால் படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வந்தது. 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில் செப்.1 ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா விதிமுறை
களான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றா
தவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டம் விரைவில் தமிழகத்தில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியான நிலையில், இந்தப் பொதுச் சுகாதாரத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இது கூடியவிரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.