கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 7 பெண்கள் பரிதாப பலி! (கடலூர் அருகே பயங்கரம்)

கடலூர், செப்.05
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசுத் தொழிற்
சாலையில் ஏற்பட்ட விபத்
தில் 7 பெண்கள் பலியாகி
யுள்ளனர்.
குருங்குடி கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட
சிறு பட்டாசு தொழிற்
சாலைகள் இயங்கி வரு
கின்றன. இதில் அப்பகு
தியைச் சுற்றியுள்ள கிராம
மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்
தொற்று ஊரடங்கு காரண
மாக மூடப்பட்டிருந்த பட்டாசு தொழிற்சாலைகள், கடந்த செப்டம்பர் 1ஆம்
தேதி ஊரடங்கு தளர்
விற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டன. கோயில் திருவிழாக்கள் மற்றும் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி இங்கிருக்கும் தொழிற்சாலைகளில், பட்டாசு தயாரிக்கும் பணி மிகவும் மும்மரமாக நடை
பெற்று வந்தது.
இந்த நிலையில், குருங்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மனைவி காந்திமதிக்குச் சொந்த
மான பாட்டாசு தொழிற்
சாலையில் நேற்று உரிமை
யாளர் உட்பட 9 பெண்கள் பணிக்குச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட
விபத்தில் தொழிற்சாலை
யிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இத
னால், அங்கு பணிபுரிந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட 5 பெண்கள் சம்பவ இடத்
திலேயே உயிரிழந்துள்
ளனர். பிறகு மேலும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஸ்ரீ
அபிநவ் விபத்தில் 7
பெண்கள் உயிரிழந்துள்ள
தாக தற்போது உறுதிப்ப
டுத்தியுள்ளார்.
மேலும், பலத்த காயங்
களுடன் 2 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்
துவக்கல்லூரி மருத்துவ
மனையில் சேர்க்கப்
பட்டனர். இந்த விபத்தினால் தொழிற்சாலை கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.