கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை, செப்.28&
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் பதவி கேட்டும், ஈபிஎஸ் தரப்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்தும் வாக்களித்தார். பின்னர் டெல்லியில் முயற்சியால் இருதரப்பும் ஒன்றாக இணைந்தனர்.என்னதான் இரு அணிகள் இணைந்தாலும் முதல்வர் எடப்பாடி தரப்பு தம்மை வலிமையாக்கிக் கொண்டது.
ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்த பலரும் முதல்வர் எடப்பாடி பழனி
சாமி அணிக்கு தாவினர். ஆனால் திடீரென அ.தி.மு.க.
வின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவகாரத்தை முன்வைத்து அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் வெடித்தது.
அ.தி.மு.க.வில் மீண்டும்
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் புதிய புதிய ஆதரவாளர்களுடன் உருவாகி உள்ளது.
ஓபிஎஸ்-தான் முதல்வர் வேட்பாளர் என சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஆனால் முதல்வர் வேட்
பாளர் எடப்பாடி பழனிசாமி
தான் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்னொரு பக்கம் பொதுச்செயலாளராக ஓபிஎஸ்- முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என்கிற பார்முலாவும் முன்வைக்கப்படுகிறது.
ஆனாலும் இருதரப்பும் ஆட்சியும் கட்சியும் தங்களது
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று காய்நகர்த்து
கின்றனர். இது தொடர்பாக டெல்லிக்கு சென்று சில
அமைச்சர்கள் பேச்சு வார்த்தையும் நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரங்கள்தான் நாளைய அதிமுக செயற்குழுவில் ஹாட் டாபிக்காக இருக்கும்.
இந்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். மதுசூதனனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சந்தித்து நலம் விசாரித்தார் ஓ.பன்னீர் செல்வம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இன்று நடைபெறும் செயற்குழு கூட்டம் தொடர்பாகவே மதுசூதனனுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்
தியதாகவும் அக்கட்சி வட்டா
ரங்கள் தெரிவிக்கின்றன.