கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் உதயமாகிறது 6 புதிய மாநகராட்சிகள்! (தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி… சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு)

சென்னை, ஆக.25
தமிழக சட்டப் பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ கத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.இது தொடர்பாக அமைச்
சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்
றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.
மேலும் காசிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி
ஆகிய நகராட்சிகள் அதனை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்
ளாட்சிஅமைப்புகளை ஒன்றிணைத்து மாநக
ராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு பூவிருந்தவல்லி, மன்னார்குடி, ஆகிய நகராட்சிகளும் அவற்றை சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
புதிய நகராட்சிகள் தொடர்பாகவும் சட்டப்பேரவையில் அறி
விப்புகள் வெளியாகின. அதன்படி, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்- கூடுவாங்ஞ்சேரி, பொன்
னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை,தாராமங்கலம், திருமுருகன் பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்
குடி ஆகிய பேருராட்சிகள் அதன் அருகே வளர்ச்சி
யடந்தஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சி
களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல். புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.