கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கழுகைப்போல சீறிப்பாய்ந்து 8 போட்ட ரபேல் போர் விமானங்கள்! (88-ஆம் ஆண்டு விமானப்படை தினத்தில் சீனாவுக்கு இந்தியா மறைமுக எச்சரிக்கை)

டெல்லி, அக்.09
இந்திய விமானப்படை விமானங்களின் சாகத்தில் தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்கள், ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த விமானங்களின் சாகச காட்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி இந்திய விமானப்படையின் 88&ம் ஆண்டு தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதையட்டி டெல்லியை அடுத்த காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்
கேற்றனர்.
இதில் முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்:
நாட்டின் இறையாண் மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முதலில் அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பறந்து சாசகம் செய்தன. வானில் வட்டமடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக ரபேல் பங்கேற்றது. கழுகைப் போல் ரபேல் விமானம் சீறியபடி பறந்து சாகசம் செய்தது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது.
இதை கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் வரிசையாக பறந்து சாகசம் நடத்தின. இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. விமானப்படை தினத்தையட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.