கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை! (வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது பற்றி தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன்…)

சென்னை, அக்.11
கொரோனா பொது
முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக கடந்த மாத இறுதியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், மீண்டும்அவர் அரசு உயரதிகாரிகளுடன் நாளை( அக்டோபர் 12) ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக ஒவ்வொரு மாத இறுதியிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து நடைமுறையில் உள்ள ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் தொடர்பாக செப்டம்பர் மாத இறுதியில் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி வரும் திங்கள்
கிழமை (அக்டோபர் 12) அரசு உயரதிகாரிகளுடன் மீண்டும் ஆலோ
சனை நடத்த உள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்
தில் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏரி, குளங்களை தூர்வாருதல், தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது,
நிவாரண உதவிகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு அரசு துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார்.
பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.