கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணை நடத்தகோரி உயர்நீதிமன்றத்தில் மனு! (கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்)

சென்னை, ஆக.24
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளனர். இளவரசி, சுதாகரன், முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளிரம்பாவை ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கொடநாட்டில் காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குதான் தெரியும் என்றும் புலன் விசாரணைக்குழு வெளிப்படையாக விசாரிக்கமால் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது என்றும் மனுதாரர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டசபையில் விதி எண் 55-ன்கீழ் இயற்கை இடர்பாடு, வெள்ளம் இது போன்ற பேரிடர்கள் பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால் சட்டசபையில் கொடநாடு விவகாரம் குறித்து 55-வது விதியின்கீழ் விவாதிப்பது என்பது சட்ட சபையின் மரபுக்கு எதிரானது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டசபையில் கொடநாடு விவகாரத்தை விவாதிப்பது சட்டசபை விதிக்கு முரணானது.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் செய்து மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். அவரது கருத்துக்களை சுதந்திரமாக சொல்ல விடாமல் சங்கடத்தை கொடுப்பதற்காக சட்டசபையை பயன்படுத்துகிறார்கள். அதன் காரணமாக வெளி நடப்பு செய்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அங்கு என்ன நடந்தது என்று நான் எப்படி சொல்ல முடியும். கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிப்பது நீதிமன்ற விசாரணையை பாதிக்கும். விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும். கொடநாடு வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வரும் நிலையில் உள்ளது. நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை என கூறியிருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதா மரணம், கொடநாடு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? என அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த பிரச்சினையை சட்டசபைக்கு கொண்டு வந்ததே அ.தி.மு.க. தான். தனிப்பட்ட முறையில் யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயக்குமார் சட்டப் பேரவை தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அவர் மாறி மாறி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது என கூறினார்