கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இ-பாஸ் குறித்து முடிவு 29-ம் தேதி ஆலோசனை! (அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார்)

சென்னை, ஆக.26
தமிழகத்தில் இ&பாஸ்
குறித்து இறுதி முடிவு
எடுக்க 29-ந் தேதி முதல்
வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ&-பாஸ் பெற்று செல்ல அரசு அனுமதி அளித்தது.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, இ-&பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியது. மறுநாளில் இருந்து இந்த உத்த
ரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தியது.எனினும், தமிழகத்தில் மட்டும் இ-&பாஸ் நடை
முறை கடைப்பிடிக்
கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இ&-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு,இ-&பாஸ் நடைமுறை தொடருமா? அல்லது ரத்து ஆகுமா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.