கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பண்ணை வீட்டில் தொடர் ஆலோசனை! (7 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு எதிரொலி)

உசிலம்பட்டி, அக்.05
தமது சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து ஆலோசனை
யில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்
ததாக கருதப்படுகிறது.
அதிகமுவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.
முனுசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், செயற்குழுக் கூட்டத்துக்கு மறுநாள்,
கொரோனா பொது
முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்
திய ஆலோசனைக் கூட்டத்
தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்று முனதினம் காரில் திடீரென புறப்பட்ட துணை
முதல்வர் ஓ.பன்னீர் செல்
வம் தமது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்தார். தமது பேரனின் பிறந்த நாளை கொண்டாடதான் அவர் பெரியகுளத்துக்கு வந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், குடும்ப உறுப்
பினர்களுடன் கொஞ்ச நேரம் செலவழித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்
வம், கைலாசபட்டியில் உள்ள தமது பண்ணை வீட்டில் தான் தற்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு தொடர்ந்து தமது ஆதர
வாளர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர் ஆர்.பி.
உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வ
நாதன், எம்.எல்.ஏ.’கள் உள்பட மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் யாரென அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், தமது ஆதரவா
ளர்களுடன் துணை முதல்
வர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்
படுகிறது.