கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார்

சென்னை, ஜூலை.19
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.
அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக முதல்வர் டெல்லி செல்கிறார். மேலும்,முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார்.
அதன்படி, இன்று 12:15 மணிக்கு குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.