கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

‘6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி!’ – முதல்வரின் அடுத்த அதிரடி

சென்னை; கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இடைக்கால பட்ஜெட் மீது இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது, “கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடையப் போகிறார்கள்” என்றார்.

இதேபோல், கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலம், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பயன்பெறும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.