கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் (முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

கடலூர், செப்.05&
காட்டுமன்னார் கோவில்
அருகே குறுங்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் பழனி
சாமி இரங்கல் தெரிவித்
துள்ளார். மேலும், வெடி
விபத்தில் உயிரிழந்த
வர்களின் குடும்பத்தி
னருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
பரவலைத் தடுக்கும்
வகையில் அமல்படுத்தப்
பட்ட லாக்டவுன் தற்
போது படிப்படியாக தளர்த்
தப்பட்டு வருகிறது. செப்.30ம் தேதி வரை
லாக்டவுன் நீடிக்கப்பட்
டாலும் 4ம் கட்ட தளர்வாக தொழிற்சாலைகள், நிறு
வனங்கள் 100 பணியாளர்
களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை அடுத்து பல தொழிற்
சாலைகளில் பணிகள் தொடங்கியுள்ளன. கடலூர்
மாவட்டம், காட்டுமன்னார்
கோவில் அருகே உள்ள குறுங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் வில்வர் ஃபயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது.
இந்த தொழிற்சாலை
யில், நேற்று (செப்.4) பெண்கள் பணிக்கு பட்
டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 11 மணி அளவில்
திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடு
பட்டிருந்த பட்டாசு தொழிற்
சாலையின் உரிமை
யாளர் காந்திமதி, அதே
பகுதியைச் சேர்ந்த
ராசாத்தி, லதா, மலர்க்
கொடி, சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த ரத்னாம்பாள், தேன்மொழி, அனிதா, ருக்குமணி ஆகிய
4 பேர் மீட்கப்பட்டு காட்டு
மன்னார்கோவில் மருத்துவ
மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மேலும் 2
பெண்கள் மருத்துவ
மனையில் உயிரிழந்தனர். இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்துதகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை
யினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு வெடித்ததில் பட்டாசு தயாரிக்கும் ஆலை கட்டிடம் முழுவது
மாக இடிந்து தரைமட்ட
மானது.பட்டாசு ஆலையில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ், ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வை
யிட்டு விசாரணை மேற்
கொண்டார்.
விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி யுள்ளதால், பட்டாசு
ஆலையில் அனுமதிக்கப்
பட்ட பட்டாசுகள் மட்டும்
தான் தயாரிக்கப்பட்டதா அல்லது, நாட்டு வெடி
குண்டுகள் ஏதேனும் தயாரிக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, கடலூர்
மாவட்டம் குறுங்குடி பட்டாசு ஆலை வெடி
விபத்தில் உயிரிழந்தவர்
களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர், அமைச்சரையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு
அனுப்பி உயிரிழந்தவர்
களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் உத்தர
விட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.