கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

நாட்டு மக்களிடையே கொரோனா பற்றி மெத்தனம் அதிகரிப்பு தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி எச்சரிக்கை

டெல்லி, ஜுலை.01
ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது. இனிமேல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவர் முக்கியமான சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.
அதன் விவரம் வருமாறு:- நாம் இப்போது அன்லாக் 2 என்ற கட்டத்தில் நுழைந்து உள்ளோம். படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்வு கொடுக்கப்பட்டு இப்போது இன்னும் அதிக தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
பருவ மழைக்காலம் என்பதால் காய்ச்சல் மற்றும் சளி போன்றவைகள் இப்போது அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பிற நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.
அன்லாக் 2 காலகட்டம் இப்போது ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் சமீப காலமாகவே, எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது. கொரோனா விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது.
தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் மக்களிடையே இப்போது மெத்தன போக்கு அதிகரித்துள்ளது. முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். இரண்டு யார்டு இடைவெளி விட்டனர், முகக் கவசங்கள் அணிந்தனர், ஒரு நாளைக்கு பலமுறை கை கழுவினார்.
இப்போது அது குறைந்து வருகிறது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் வென்று காட்ட வேண்டும்.
20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் ரூ31,000 கோடி கொடுத்திருக்கிறோம். பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்துக்குட் பட்டவர்கள். அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்திய மக்கள் 2
மடங்கு அளவில் பயனடைந்
துள்ளனர். வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ50,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
ஏழைகள் மேம்பாட்டுக்காக ஏற்கனவே ரூ1.75 கோடி திட்டத்தை அறிவித்துள்ளோம். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவில் நிலைமை மிகவும் சீராகவே உள்ளது.
பிரதமரின் கரோன் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மேலும் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை விரிவுபடுத்தப்படும்.
அதாவது நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேஷனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும். 5 கிலோ கோதுமை அல்லது 5 கிலோ அரிசி, ஒரு கிலோ கடலை பருப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.