கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா தடுப்பூசிக்கு தமிழகத்தில் அனுமதி! (சென்னை ராஜீவ்காந்தி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் பரிசோதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு)

சென்னை, ஆக.27&
சென்னை ராஜீவ்
காந்தி, போரூர் ராமச்
சந்திர மருத்துவமனை
களில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு மனித பரிசோதனைக்கு உட்படுத்த முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
உத்தரவு பிறப்பித்
துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தமிழக மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து கண்டுபிடித்து இருக்கும் கொரோன தடுப்பு மருந்தான கோவி
ஷீல்டு இந்தியாவில் 2ம் மற்றும் 3ம் கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தப் பரிசோதனையை ஆக்ஸ்போர்டு நிறுவனத்
துடன் இணைந்து புனாவில் இருக்கும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு சீரம் நிறுவனத்துக்கு ஆக்ஸ்போர்டு அனுமதி அளித்து இருந்தது.
இந்தியாவிலும் இந்த மருந்தை சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரிக்க இருக்கிறது. இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பு
மருந்து ஏற்கனவே பிரிட்டனில் மனித பரிசோ
தனை செய்யப்பட்
டுள்ளது. அங்கு நல்ல பாதுகாப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த மருந்து இந்தியா
வில் 17 இடங்களில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மருந்து மனித உடலில் செலுத்திய 14வது நாளில் டி செல்கள் தூண்டப்படும். 28வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். டி செல் என்பது வெள்ளை ரத்த அணுக்கள்.
அவை கொரோனா வைரஸ் தாக்கிய செல்
களை அழித்துவிடும். நோய் எதிர்ப்பு என்பது
புரோட்டீன் மூலக்கூறு
களாகும். இவை வைரஸை சமன்படுத்தும். துவக்கத்தில் செல்களை வைரஸ் பாதிக்காமல் பாதுகாக்கப்படும்.
நாடு முழுவதும் இந்த ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு மனித பரிசோதனைக்கு 1600 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
சண்டிகரில் இருக்கும்
மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்
கும் ஏபிஜெ மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திரா நினைவு மருத்துவ அறி
வியல் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம், விசாகப்பட்டி
னத்தில் இருக்கும்ஆந்திரா
மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி ஆகியவற்றில் ஆக்ஸ்போர்டு தடுப்பு
மருந்து மனித பரிசோ
தனை 2ம் மற்றும் 3ம்
கட்ட ஆய்வுகள் செய்யப்
படவுள்ளது.