கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவை அடக்கிய தமிழ்நாடு குணமடைந்தோர் எண்ணிக்கை புதிய உச்சம்! (நேற்று ஒரே நாளில் 5106 பேர் வீடு திரும்பினர்)

சென்னை, ஜுலை.17&
தமிழ்நாட்டில் இது
வரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 5106 பேர்
ஒரே நாளில் கொரோ
னாவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோ
னாவை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 45888
பரிசோதனைகள் மேற்
கொள்ளப்பட்டன.
ஒரே நாளில் மேற்
கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை இதுதான். நேற்று தமிழ்நாட்டில் 4549 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை
யடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த
10 நாட்களாக கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது.
பரிசோதனை அதிகரிக்
கப்பட்ட நிலையில், பாதிப்பு
அதிகரிக்காமல் குறைந்
திருப்பது நல்ல அறிகுறி.சென்னையில் நேற்று
1157 பேருக்கு கொரோனா
தொற்று கண்டறியப்
பட்டது. எனவே சென்னை
யில் பாதிப்பு எண்ணிக்கை
82128ஆக அதிகரித்
துள்ளது.
நேற்று முன்தினம் 5000 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த நிலையில், நேற்று அதை
விட அதிகமாக இதுவரை இல்லாத அளவிற்கு, 5106 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416ஆக அதிகரித்துள்ளது. 46714
பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.நேற்று 69 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை
2236 ஆக அதிகரித்
துள்ளது .
தமிழ்நாட்டில் பரிசோ
தனை அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாதிப்பு தாறுமாறாக அதிகரிக்
காமல் கட்டுக்குள் இருப்
பது, நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.