கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா… புதிதாக 1,45,384 பேருக்கு தொற்று; 794 பேர் பலி!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகளவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கத்தால் கொரோனா தொற்ரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிய உச்சமாக, புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்க்கு நாடு முழுவதும் மொத்தம் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம், கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,68,436 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதே நேரம், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 25,52,14,803 மாதிரிகள் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 11,73,219 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது வரை 10,46,631 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.