கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா… தினசரி பாதிப்பு 1.68 லட்சமாக உயர்வு!

புடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த நோய்த் தொற்றால் தினசரி பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 6 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,68,912 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்நோய் பாதிப்பால் 904 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பாதிப்பால் இதுவரை நாடு முழுவதும் 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,01,009 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் நேற்று வரை 10,45,28,565 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,80,136 பேரிடம் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 78 லட்சத்து 06 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.