கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம் !

சென்னை, அக்.27
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தக
வல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்குகாரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தனம் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது துரைக்கண்ணுவிற்கு கொரோனா இருப்பதாகவும் அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் தங்கமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ், வேலுமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.