கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.85 லட்சமாக அதிகரிப்பு! (குணமடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சம்)

சென்னை, ஆக.25&
தமிழகத்தில் நேற்று
5967 பேருக்கு கொரோனா
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த கேஸ்களின் எண்
ணிக்கை தமிழகத்தில் 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
லேசாக சரிந்த கிராப் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இ – பாஸ் தளர்வு உள்ளிட்ட நிறைய தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
அதிலும் சென்னையில் கேஸ்கள் மீண்டும் 1200க்கும் அதிகமாக தினமும் வர தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 53282 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று
மட்டும் 1278 பேருக்கு கொரோனா ஏற்பட்ட
டுள்ளது.
சென்னையில் மொத்தமாக 126677 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,25,456 பேர் இதுவரை மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 97 பேர் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் 100க்கும் குறைவான மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும்
தொடர்ந்து பலி எண்
ணிக்கை, அதிலும் குறைந்த வயது கொண்டவர்கள் பலியாவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்தமாக 6614 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.
நேற்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23806 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று திருவள்ளூரில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 22759 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று கோவையில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 12114 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
நேற்று 70023 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. 4276640 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 67980 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்
டுள்ளது. மொத்தமாக 4131604 பேருக்கு தமிழ
கத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.