கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவால் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு

சென்னை, அக்.15
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்
குவரத்து சேவை, கடைகள், விளையாட்டு, சினிமா
என அனைத்தும் முடங்கியது.
இப்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்தும் இயக்கத் தொடங்கின. -ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் படிப்பு
களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் நீண்ட காலமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளது.
தொடர்ந்து திவிர ஆலோசனை நடத்தி வந்த மத்திய அரசு அண்மையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும், படம் பார்க்க வருவோர்
களுக்கு உணவு கொண்டு வழங்கக்கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன.இதனால் பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கும் பணி தொடங்குகிறது.
மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரை
யரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்
உள்ளிட்ட சில நகரங்களிலும் திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதால் அங்கும் பல்வேறு முன்னேற்
பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஏழு மாதங்களுக்குப் பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாக
வில்லை.தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும் என
தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.