கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்!’ – போட்டு தாக்கும் குஷ்பு

சென்னை: மூளை வளர்ச்சியில்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று நடிகை குஷ்பு கடுமையாக தாக்கி உள்ளர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, நேற்று பிற்பகல் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் ரவி, தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன் பின்னர் இன்று தமிழகம் திரும்பிய நடிகை குஷ்புவிற்கு, சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, ”பா.ஜ.க.வில் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 6 வருடங்கள் கழித்து, நான் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு என்னை நடிகையாக பார்ப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் கூறுகிறார். சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத ஒரு கட்சி தான் காங்கிரஸ். காங்கிரஸில் இருக்கும் போதும் மரியாதை இல்லை. வெளியேறும் போதும் மரியாதை இல்லை. அவர்களின் குற்றச்சாட்டிற்கு கமலாலயம் சென்ற பிறகு தான் பதிலளிக்க முடியும்” என்று கூறிவிட்டு சென்றார்.

அதன்பின் கமலாலயத்தில் செய்தியாலளர்களிடம் அவர் பேசும்போது, ”மக்களுக்கு நல்லது செய்யவே நான் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளேன். பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை. 2 ரூபாய் வாங்கி கொண்டு என்னை பற்றி டுவீட் போட்டது காங்கிரசார்தான். காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் நான் பா.ஜ.க.வை விமர்சித்தேன்.

பாஜ.க.வில் நான் சேருவதற்கு என் கணவர் சுந்தர்.சி தான் காரணம் என்று கூறக்கூடாது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும். அதுதான் அவர்களின் வேலை. ஆளுங்கட்சியை எதிர்த்து கருத்து சொல்வது தான் கொள்கை அதனை தான் நான் செய்தேன். இருக்கும் இடத்தில் விஸ்வாசமாக இருக்க வேண்டும். அதையும் நான் செய்தேன்.

காங்கிரஸ் கட்சிக்காக பல மாநிலங்களை சுற்றும்போதும், கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் போதும் நான் நடிகையாக அவர்களுக்குத் தெரியவில்லை. இன்று என்னை நடிகையாக பார்ப்பதாக சொல்கின்றனர். நடிகை எனக்கூறியவர், தலைவர் போல் நடிக்கிறார். பெண் ஒருவர் புத்திசாலித்தனமாக இருக்கக்கூடாது என அவர்கள் நினைக்கின்றனர்” என்றார் ஆவேசமாக.