கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தளபதி 65 துப்பாக்கி 2 இல்லை…? முருகதாஸ் அதிரடி.!

தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர் வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ள தாகவும் கூறப்படுகிறது. மேலும் மடோனா செபாஸ்டின் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது தளபதி 65ல் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் முருகதாஸ் அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் இல்லையென்றும் மிகவும் வித்யாசமான கதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.