கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் அக்டோபர் 31-வரை 5-ஆம் கட்ட பொதுமுடக்கம் நீட்டிப்பு! (கலெக்டர்கள்-மருத்துவ நிபுணர் குழு ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

சென்னை, செப்.30
தமிழகத்தில் தளர்வுகளுடன்
அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக்
கப்பட்டுள்ளது. 5ம் கட்ட தளர்வு
களுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோ
னாவால் அனைத்தும் மூடப்
பட்டிருந்த நிலையில் கடந்த
மாதம் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோ
சனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊர
டங்கில் தளர்வுகள் அளிப்
பது குறித்து ஆலோசித்தார்.
பின்னர் பொதுப்போக்கு
வரத்து சேவையை தொடங்கு
மாறு நிபுணர் குழு பரிந்துரைத்ததன் பேரில், பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முதல்வர் அனுமதி அளித்தார். இருப்பினும் கொரோனா தாக்கம் சிறிதும் குறையாததால் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்:
பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதற்கான தடை தொடரும்.
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது.
கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்.
அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.
உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து.
உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.
திரைப்படப் படப்பிடிப்பு
களுக்கு 100 பேர் வரை அனுமதி.
கூட்டங்கள், ஊர்வலங்க
ளுக்கும் தடை நீட்டிப்பு.
சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி.
முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்
மருத்துவ குழுவுடன் முதல
மைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்
களுடன் நேற்று காலை 11
மணிக்கு தலைமை செயலகத்
தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்
தினர். பின்னர் மதியம் 3 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.