கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பலி! (குணமடைந்தோர் எண்ணிக்கை 4.23 லட்சமாக உயர்வு)

சென்னை, செப்.11
தமிழ்நாட்டில் நேற்றைப்
போலவே நேற்று கிட்டத்
தட்ட ஒரே அளவில் கொரோனா பாதிப்பு
உள்ளது. நேற்று கொரோனா தொற்றால்
5,528 பேர் பாதிக்கப்பட்
டுள்ளனர். இதனால் தமிழ
கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 53 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 48 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
அரசு பரிசோதனை எண்ணிக்கையை 82 ஆயிரம் என்கிற அளவில் தொடரந்து நடத்தி வருகிறது. கொரானாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்
படுவோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் போல் நேற்றும் 6000த்தை தாண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று
கொரோனா தொற்றால்
5,528 பேர் பாதிக்கப்பட்
டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. இதனால் தமிழ
கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோ
னாவில் இருந்து நேற்று 6,185 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,231 த்தில் இருந்து 4,29,416 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று
அதிகபட்சமாக சென்னை
யில் 1009 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 567 பேரும, கோவையில் 580 பேரும், கடலூரில் 476 பேரும், செங்கல்பட்டில் 362 பேரும்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்
டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோ
னாவால் நேற்று முன்தினம்
78 பேர் பலியான நிலையில்
நேற்று அதைவிட குறை
வாக 64 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியான
வர்களின் எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச
மாக சென்னையில் 11
பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்த
படியாக சேலத்தில் 7 பேரும், நாகப்பட்டினத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 4 பேரும் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 85,473 கொரோனா பரி
சோதனை நடத்தப்
பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 56,30,323 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 83,411 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 54,49,635 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் நேற்று முன்தினம் 49,203 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று 48,482 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,606ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்புடன் 10845 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நேற்று 440 பேரும், சேலத்தில் 300 பேரும், திருவள்ளூரில் 296 பேரும், செங்கல்பட்டில் 279 பேரும், கடலூரில் 263 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.