கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

சென்னை, செப்.26
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்
னையில் நேற்று பகல் 1 மணிக்கு காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை
தனியார் மருத்துவமனை
யில் 51 நாட்களாக எஸ்.பி.
பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென நேற்று முன்தினம் கவலைக்கிடமானது.
இதனையடுத்து மருத்
துவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பல
னின்றி எஸ்.பி. பாலசுப்பிர
மணியம் உயிர் பிரிந்தது. சென்னையில் எஸ்.பி.பி. மகன் சரண் இந்த தகவலை அறிவித்தார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்
பிரமணியத்திற்கு கொரோனா இல்லை என்றும் அவர் மாரடைப்
பால் காலமானதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதன் மூலம் எஸ்.பி.பி.க்கு பொதுமக்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.
பாடும் நிலா என்ற
ழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு காரணமாக ஆக.5-ம் தேதி
அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவ
மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் அவருக்கு செயற்கை சுவாசமும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு செப்.4ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா சோதனை
யில் அவருக்கு கொரோனா இல்லை என வந்துவிட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் கொடுத்தும் நேற்று காலை அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து எஸ்.பி.பி.யின் உயிர் நேற்று மதியம் 1.04
மணிக்கு பிரிந்தது.
அவரது குடும்பத்தின
ருக்கும், அவரது நண்பர்க
ளுக்கும் நலம் விரும்பி
களுக்கும் எங்கள் இதயப்
பூர்வமான அனுதாபங்
களை தெரிவித்துக் கொள்
கிறோம் என மருத்துவ
மனை நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் 1 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
பாடும் நிலா என
செல்லமாக அழைக்கப்
பட்ட எஸ்.பி.பி, இசை உலகில் நீங்கா வெற்றி
டத்தை அளித்துவிட்டு சென்று விட்டார். இனி அவரை எப்போது பார்ப்
போம், அவரது இனிமை
யான குரல் எப்போது கேட்போம், புன்னகை பூத்த அவரது சிரிப்பை எப்போது பார்ப்போம் என எண்ணி ஒவ்வொரு உள்
ளங்களும் கனக்கிறது.
மண்ணுலகில் பாடி
யது போதும் விண்ணுல
கில் பாட வா என இறை
வன் அவரை அழைத்து சென்று விட்டார் என திரை பிரபலங்களும், இசை உலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அரசியல் தலைவர்களும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்
பட்ட அவரது உடல், சென்னை அருகே தாமரைபாக்கத்தில் இருக்கும் எஸ்பிபியின்
பண்ணை வீட்டில் பொது
மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்
றனர். அவரது உடல்
உறவினர்கள் மற்றும்
பொதும’கள் அஞ்ச
லிக்காக பண்ணை இல்
லத்தில் வைக்கப்பட்டு, இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி நம்மை விட்டு மறைந்தாலும், அவரது நினைவலைகள் என்றென்றும் நம்முடன் இருக்கும்