கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

Menu

“கிறிஸ்துமஸ் பண்டிகை… தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை!”

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக, தேவாலயங்களுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கு முன், அவர்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இயேசு பிறந்த பெத்லேஹேம், வாடிகன், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அத்துடன், கலை நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், சமூக இடைவெளியை பின்பற்றி இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அப்போது போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தியை வாசிக்கும்போது, ”இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார்.

இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம்.

இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்றார்.

இதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் தேவாலயம், வேளாங்கண்ணி தேவாலயம், திருச்சி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள தேவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் வின்சென்ட், உதவி பங்குதந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலில் உள்ள இயேசுவின் சொரூபத்தை வணங்கினர். அதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.