கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சீன ராணுவம் தாக்கினால் உடனே திருப்பி அடிங்க இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம்

லடாக், ஜுன்.22-
சீன ராணுவம் கடந்த 15ம் தேதி இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், சீன தரப்பிலும் ராணுவ
வீரர்கள் உயிரிழந்திருப்
பதாக தகவல்கள் வெளியா
னாலும், சீனா சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
சீனாவின் இந்த அத்து
மீறல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலையும், எல்லையில் பதற்றத்தையும் அதிக
ரித்தது. இந்த தாக்குதலை
யடுத்து, இருதரப்பு வெளி
யுறவுத்துறை அமைச்சர்
களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சு வார்த்தையின் போது, சீனா அத்துமீறியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார் இந்திய வெளி
யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்தியா&-சீனா
இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, அதன்பின்னர் பம்மியது. இந்தியாவுடனான மோதலை விரும்பவில்லை என சீனா தெரிவித்தது.
சீனா பம்மிய அதே
வேளையில், இந்தியாவின் குரல் வலுத்து ஒலித்தது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு தான்.
ஆனாலும், இந்தியா
அதன் இறையாண்மை
யையும் ஒற்றுமையையும் காப்பதற்காக, எதையும் செய்யும் என்று கெத்தான தொனியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
போர் நிறுத்த ஒப்பந்
தத்தை மீறி சீனா அவ்வப்
போது சீண்டுவதும், தாக்குதல் நடத்துவதுமாக இருக்கும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதில்லை. சீனாவின் இந்த தாக்கு
தலையடுத்து, சம்பவம்
நடந்த கல்வான் பள்ளத்
தாக்கு உள்ளிட்ட சீன
எல்லை பகுதிகளில் கூடு
தலாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது இந்தியா.
இந்நிலையில், சீனா விவகாரம் குறித்து பாது
காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்
கூட்டத்தில், பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோனைக்
கூட்டத்தில், சீனாவுடனான விவகாரம் குறித்தும், எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும்
பாதுகாப்பு அம்சங்கள்
குறித்து விவாதிக்கப்பட்
டுள்ளது.
இந்நிலையில், அந்த
ஆலோசனைக்கூட் டத்தில்
கலந்து கொண்ட ராணுவ உயரதிகாரி ஒருவர், இனிமேல் சீனாவுடனான இந்தியாவின் அணுகு
முறை வித்தியாசமாக இருக்கும். களத்தில் இருக்கும் ராணுவ வீரர்
களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. களச்சூழலுக்கு ஏற்ப அவர்களே இனி முடிவு எடுக்கலாம் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இனிமேல் சீனா எல்லை
யில் அத்துமீறினால், ராணுவ உயரதிகாரிகள் அல்லது அரசாங்கத்தின் உத்தரவுக்காக எல்லாம் ராணுவ வீரர்கள் காத்தி
ருக்க வேண்டிய அவசிய
மில்லை. களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களே சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.
சீனா தாக்குதல் நடத்
தினால் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கலாம்.