கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“விவசாயிகளின் ஆசைக்கு மாட்டு வண்டி ஓட்டிய முதல்வர் பழனிசாமி!”

புதுக்கோட்டை: விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை இன்று முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, விவசாயிகளின் ஆசைக்கு மாட்டு வண்டியை அவர் ஓட்டினார்.

கொரோனா தடுப்பு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட வாரியாக தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமான காளைகள் கலந்து கொண்டது. இதை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வந்திருந்து ஆய்வு செய்தனர். இறுதியில் அந்த குழுவினர், கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதாக அறிவித்துவிட்டு அதற்கான சான்றிதழை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கி சென்றனர்.

அந்த சிறப்பை போற்றும்விதமாக விராலிமலை-திருச்சி சாலையில் காளையுடன் வீரர் சிலை அமைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி மேற்கொண்டார். அதன்படி அமைக்கப்பட்ட சிலையை இன்று முதல்வர் பழனிசாமி திறந்து வித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, விவசாயிகளின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ”இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது. 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது” என்றார்.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அப்போது, விவசாயிகளின் ஆசையை ஏற்று மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை முதல்வர் ஓட்டினார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.