கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

டிஸ்சார் ஆனார் முதல்வர் பழனிசாமி… முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு முதல்வர் பழனிசாமி இன்று வீடு திரும்பினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில நாட்களாக தீவிர வயிறு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள், முதல்வருக்கு வயிறு பகுதியில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதில் முதல்வருக்கு, குடலிறக்க நோய் (ஹெர்ணியா) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து உடனே மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து, முதல்வரின் வயிறு பகுதியில் சிறிய ஆபரேஷன் (லேப்ராஸ்கோபி சிகிச்சை) மூலம் குடலிறக்கத்தை சரி செய்துள்ளனர். அவரது உடல்நிலை சாதாரண நிலைக்கு திரும்பியதும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் மருத்துவர்கள் அவரை ஒரு நாள் மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் நேற்று ஒரு நாள் முதல்வர் மருத்துவமனையில் தங்கினார். சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சகஜ நிலைக்கு திரும்பி அவரே எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் அடையாற்றில் உள்ள அரசு வீட்டுக்கு திரும்பினார். ஆனாலும், 3 நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.