கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புதுக்கோட்டை: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் அரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்,

முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ”கொரோனா வைரசை வல்லரசு நாடுகளில் கூட கட்டுப்படுத்த முடியவில்லை ஆனால், தமிழக அரசின் கடுமையான முயற்சியால், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் நோய் பரவல் குறைந்துள்ளது. அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நமது மருத்துவ நிபுணர்கள் நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள், தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா நோய் பரவல் குறைந்திருக்கிறது. கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அரசு செலவில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரொனா தடுப்பூசி போடப்படும்” என்றார்.