கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை! (கொரோனா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய… விழாக்கோலம் பூண்டது மாவட்டம்)

இராமநாதபுரம், செப். 22&
இராமநாதபுரத் திற்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று (22&ந் தேதி) வருகை தருகிறார்.
அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட் டத்தில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்
தும் மாவட்டந்தோறும் நேரில் சென்று அதிகாரி
களுடன் ஆய்வு செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நாளை இராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர்
அலுவலக வளாகத்தில்
காலை 9.30 மணிக்கு நடை
பெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்
கொள்கிறார்.
ஆட்சியர் அலுவலக வளா
கத்தில் நடக்கும்விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்
கல் நாட்டி,நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு துறைகளின் சார்பில்
நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
மதுரையிலிருந்து கார்
மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுகசார்பில் மாவட்ட கழக செயலாளரும் மத்திய
கூட்டுறவு வங்கி தலைவரு
மான எம்.ஏ. முனியசாமி தலைமையில் மாவட்ட
எல்லையான பார்த்திபனூர்
எல்லையில் மேளதாளத்
துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து பரமக்குடி சத்திரக்குடி அச்சுந்
தன்வயல் ராமநாதபுரம் உள்
ளிட்ட பல்வேறு பகுதிகளில்
வரவேற்பு அளிக்கப்படு கிறது.
முதல்வர் எடப்பாடி பழனி
சாமியின் வருகையை யட்டி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் வண்ண வண்ண விளக்கு
களில் அலங்கரிக்கப்பட்டுள்
ளது. அதேபோல ராமநாத
புரம் நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.