கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியீடு

சென்னை, செப்.13&
செப்டம்பர் 14 முதல் 16 வரை என மூன்று நாட்கள் தமிழக சட்டசபையைக் கூட்ட, வணிக ஆலோ
சனைக் குழு முடிவு செய்த
தைத் தொடர்ந்து, நேற்று
முதல்வர் கே. எடப்பாடி
பழனிசாமி, துணை
முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோவிட்-19 தொற்று சோதனை செய்து கொண்டனர்.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்
னர், சட்டமன்ற உறுப்
பினர்கள் கட்டாயமாக கோவிட்-19 சோத
னைக்கு தங்களை உட்படுத்
திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அதாவது அமர்வுக்கு 72 மணி நேரத்திற்கு முன்
னர் சோதனை செய்யு
மாறு சட்டமன்ற உறுப்பி
னர்களுக்கு குழு அறிவுறுத்தியது.
இதனையடுத்து, முதல்வர், துணை முதல்
வர், சபாநாயகர், அமைச்
சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்கட்சி தலை
வர்கள் வீடுகளுக்கு சென்று நேற்று கொரோனா பரி
சோதனையை சுகாதாரத்
துறை அதிகாரிகள் மேற்
கொண்டனர்.
நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகி
யுள்ளது. அதில் தமிழக
முதலமைச்சர் கே.பழனி
சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபா
நாயகர் தனபால், எதிர்க்
கட்சி தலைவர் மு.க.
ஸ்டாலின் உள்ளிட்டோ
ருக்கு கொரோனா தொற்று
இல்லை என தெரிவிக்
கப்பட்டு உள்ளன.
செப்டம்பர் 11 முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்
பினர்களை சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவை வெளியீடு
தெரிவித்தது. மேலும், சட்டமன்ற ஊழியர்கள், மார்ஷல்கள், அதி
காரிகள் மற்றும் பத்திரிகை
யாளர்கள் ஆகியோர் சட்டமன்ற மண்டபத்
திற்குள் நுழைவதற்கு முன் சோதனை செய்து கொண்டு தங்களுடன் “கொரோனா வைரஸ் எதிர்மறை சான்றிதழ்” வைத்திருக்க வேண்டும் என்று என சபாநாயகர் தெரிவித்திருந்தார் தெரிவித்திருந்தார்.
அதேபோல சட்டசபை
நிகழ்வுகளில் பங்கேற்
கவுள்ள அதிகாரிகள்
மற்றும் பத்திரிகையாளர்
களும் கோவிட்-19
பரிசோதனை செய்து
கொள்ள வேண்டும்.
கோவிட்-19 பரி
சோதனை முடிவுகள் எதிர்
மறையையாக வரு
பவர்கள் மட்டுமே சட்ட
சபை அமர்வுக்கு அனுமதிக்
கப்படுவார்கள்.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்களின் குடியி
ருப்புகளிலும், சட்டமன்ற செயலக வளாகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சோதனைக்கான ஏற்
பாடுகள் செய்யப்பட்
டுள்ளன.
எம்.எல்.ஏ.க்களைத் தவிர, “சட்டசபை செயல
கத்தால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே சட்டமன்ற மண்
டபத்தில் அனுமதிக்கப்
படுவார்கள்.”
செயின்ட் ஜார்ஜ் கோட்
டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில், 200+ எம்.எல்.ஏ.க்கள் கூடும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போகலாம். இன்றைய கொரோனா காலத்தில், இது அத்தியாவசியமானது என்பதால், அதற்கேற்ப, இந்த அமர்வு வாலாஜா சாலையில் உள்ள கலைவானர் அரங்கத்தில் கூட்டப்பட முடிவு செய்யப்பட்டது.