கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி! (ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் அ.தி.மு.க. அதிகார பூர்வ அறிவிப்பு)

சென்னை, அக்.08
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளி
யான நிலையில் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
காலையில் தொடங்கி இரவு வரையும் ஆலோசனை நடைபெற்றது. விடிய விடிய நடந்த ஆலோசனை அதிகாலையில் முடிவுக்கு வந்தது.
முன்னதாக கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள பெயர்களை முதல்
வரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனி
சாமி அறிவித்தார்.
அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இந்த வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 1.திண்டுக்கல் சீனிவாசன் 2. தங்கமணி 3. எஸ்.பி.வேலுமணி 4. ஜெயக்குமார் 5. சி.வி.சண்முகம் 6.காமராஜ் 7. ஜே.சி.டி.பிரபாகர் 8. மனோஜ் பாண்டியன் 9. பா.மோகன் 10. கோபால கிருஷ்ணன் 11. மாணிக்கம்.
அதிமுக முதல்வர் வேட்பாளர், கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை அறிவித்ததன் மூலம் அதிமுக 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் வர
லாற்றில் நேற்றைய தினம் முக்கியமான நாளாக அமைந்துள்ளது.