“சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி; நிலம் கையகப்படுத்த தடை!” – உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை – சேலம் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. a buon mercato securo மத்திய அரசின், ‘’பாரத்மாலா’’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பசுமை சாலைத் திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்தத் திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக அதிரடி உத்தரவிட்டது. அத்துடன், இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்திற்க்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தினன அந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே நேரம், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. ivermectina belo horizonte எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ”சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை செல்லும். ஆனால், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை.

இந்த திட்டத்திற்காக அரசு கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. சுற்றுசூழல் முன் அனுமதி பெறாமல் நிலத்தை கையகப்படுத்தியது தவறு. does petco sell ivermectin
உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். புதிய அறிவிக்கை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.