சென்னையில் மீண்டும் ஊரடங்கு இல்லை! (வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

சென்னை, ஜுன்.13&
ஊரடங்கு மீண்டும் அமல்
படுத்தப்படும் என்ற செய்தி தவறானது என முதல்வர் எடப்பாடி
பழனிசாமி தெரிவித்
துள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக
மேட்டூர் அணையை நேற்று
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்
களைச் சந்தித்த அவரிடம்
ஊரடங்கு நீட்டிக்கபடவுள்ளதா
என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர்,
சென்னையில் ஊரடங்கு
மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற செய்தி தவறானது. அரசுக்கு அத்தகைய நோக்கம் இல்லை. அந்த செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். dosis kilox gotas
87 லட்சம் பேர் சென்னை
யில் வசிக்கின்றனர். சென்னையில் குறுகலான தெருக்களில் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். ஒரே வீட்டில் 7 -8 பேர் வசிக்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. ஆறு
அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வளர்ந்த வல்லரசு நாடுகளில்கூட கொரோ
னாவை கட்டுப்படுத்த முடிய
வில்லை. இதற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் விழிப்
புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். நோயின் வீரி
யத்தை மக்கள் புரிந்து
கொள்ளவில்லை என்றார்.
அப்போது தனியார் பள்ளிகள் கட்டண வசூல் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் தொடர்பாக அரசுக்கு புகார் வந்தால் கடும் நடவடிக்கை பாயும், பெற்றோர் தைரியமாக புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதேபோல் தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்துமா என மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தனியார் மருத்துவமனைகளை அரசு கையக்கப்படுத்த முடியாது; இது ஜனநாயக நாடு எனக் கூறினார். ivermectin and spinosad
மேலும், கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தினார்.