சென்னை, ஜுன்.30
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத்
துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும்
நோய்த்தொற்று கட்டுக்
குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு இன்
றுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோ
சனை நடத்தினார்.
கொரோனா தொடர்
பாக மருத்துவ குழுவின
ருடன் முதல்வர் ஆலோ
சனை நடத்துவது இது 7-&வது முறையாகும். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்தும், 6-வது கட்டமாக
ஊரடங்கை நீட்டிக்க வேண்
டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்
களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்
பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற மாவட்
டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 15
வரை ஊரடங்கு நீட்டிக்கப்
பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
