கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கார்கில் நாயகன் வாஜ்பாய் நினைவு நாள் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

டெல்லி, ஆக.17&
நவீன இந்தியாவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு வித்
திட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாயின் 2ம் ஆண்டு நினைவு தினம்
நேற்று அனுசரிக்கப்
பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையட்டி டெல்லியில் உள்ள
அவரது நினைவிடத்
தில் பிரதமர் மோடி,
குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இவர்களுடன் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதுபற்றி தனது ட்விட்
டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாயின் அளப்பரிய சாதனைகளை, தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய செயல்பாடுகளை இந்தியா எப்போதும் நினைவில் வைத்
திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் அடல் பிகார்.
காங்கிரஸ் அல்லாத தலைவராக 5 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பிரதமர் ஆவார். அணுகுண்டு சோதனை, புதிய தொலைத்தொடர்பு கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம், கார்கில் போர் வெற்றி, அமெரிக்கா உடனான நல்லுறவு, லாகூருக்கு பேருந்து போக்குவரத்து, சீனாவுடன் வணிகத் தொடர்பு, டெல்லி மெட்ரோ ரயில், உலகத்தரமிக்க தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவை வாஜ்பாய் ஆட்சியின் சிறப்புகள் ஆகும்.
இவரை கௌர
விக்கும் வகையில் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இவர் 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில் குறிப்பிடுகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் நாடு மிகச்சிறந்த ஆட்சியை முதல்முறை கண்டது.
இவரது சிந்தனை
களைப் பின்பற்றி ஏழைகளுக்கான நல்ல திட்டங்களையும், சிறந்த ஆட்சியையும் மோடி அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பொது வாழ்விலும், இந்தியாவின் மேம்பாட்டிற்காக வாஜ்பாயின் சிறப்புமிக்க திட்டங்களும், அவரது தொலைநோக்கு பார்வையையும் நமது நாடு என்றுமே கொண்டாடும். இது வரும் தலைமுறையினருக்கு உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.