கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கார் மீது லாரி மோதல் விபத்தில் 5 பேர் பலி! (விருத்தாச்சலம் அருகே பயங்கரம்)

விருத்தாசலம், செப்.09
விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் மீன் வண்டி கிளினர் உள்பட ஐந்து பேர் இறந்தனர் குழந்தைகள் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர் .
கள்ளக்குறிச்சி மாவட்
டம் நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவர் தனது மகன் அறிவரசனுக்கு மொட்டை போடுவதற்காக விருத்தாசலம் அருகி
லுள்ள கொளஞ்சியப்பர் கோயிலுக்கு ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டி
ருந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கைகாட்டி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது அப்போது எதிரில் பரங்கிப்பட்டை
யிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி
சென்ற மீன் வண்டி இருசக்கர வாகனத்தில் மோதி எதிரில் வந்த சைலோ காரில் பலமாக
மோதி விபத்துக்குள்
ளானது.
இந்த விபத்தில் காரை
ஓட்டி சென்ற தேவ்
ஆனந்த் (வயது 33) அவரது மனைவி பரிமளா
(வயது -27), மகன் அறிவரசன் (வயது 3),மகள் ரேணுகாதேவி (வயது 7) அம்மா மணிமேகலை (வயது 55) அவரது அக்கா வேலுச்சாமி மனைவி ரேவதி (வயது 32) இவரது மகன் பிரித்திவி சாய் (வயது 9) ரேவதி மகள் பவாணி (வயது 15) ஆகிய எட்டுபேரில் தேவ் ஆனந்த், பரிமளா, ரேவதி, பவாணி, ஆகிய நான்கு பேரும் , மீன் வண்டி கிளினர் நெய்வேலியை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற குணப்பிரியன் (வயது 19) கை கால்களில் பலத்த காயமும், பிரித்திவி சாய், அறிவரசன், ரேணுகா, மணிமேகலை, மீன் வண்டி ஓட்டுனர் செல்வசேகர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைகாக பெரம்பலூர் மற்றும்
திருச்சி மருத்துவமனை
களுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
சம்பவம் நடந்தவுடன் வேப்பூர் காவல் ஆய்
வாளர் கவிதா தலைமை
யில் சென்ற போலிசார் காரில் சிக்கியவர்களையும் இறந்தவர்களையும் மனிதாபினாத்துடன் தூக்கி சென்று வழியில் வந்த ஆட்டோ , டாடா ஏஸி வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், திட்டக்குடி காவல் துணை கண்
காணிப்பாளர் வெங்க
டேசன் ஆகியோர் போக்கு
வரத்தை சீரமைத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட வேப்பூர் காவல்துறையினர்களை பாராட்டினார்கள்.
இந்த விபத்து குறித்து
திட்டக்குடி காவல்
துணைக் கண்காணிப்
பாளர் வெங்கடேசன் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்.