கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

184 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும்! (தமிழக சட்டசபை தேர்தல் பற்றி கசிந்த பரபரப்பு தகவல்)

சென்னை, ஏப்.12
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது பற்றி தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் கணிப்பு தெரிவித்துள்ளார்
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பதிவான வாக்குகள் வருகிற 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என்று ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவாக இருந்த போதும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே இது முக்கியமான தேர்தல் என்பதால் இந்த இரண்டு கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வந்தன. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை 5 முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சியான தி ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகம், மேற்கு வங்கம் தேர்தல் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மேற்குவங்கத்தை பொறுத்தவரை பாஜக 100 தொகுதிகளைத் தாண்ட முடியாது என்றார். ஒருவேளை எனது கணிப்பு தவறும் பட்சத்தில் தேர்தல் உத்திவகுப்பாளர் என்ற இந்த தொழிலை விட்டு விடுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு தேர்தலை பொறுத்தவரை தேர்தலுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, திமுகவுக்கு எதிரான மொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து 50 தொகுதிகளைத் தாண்டாது என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணி 184 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.