கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து! (நாளை முதல் அமலுக்கு வருகிறது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு)

சென்னை, ஆக.31&
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது முடக்கம், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்
பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவ
டிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின், 7ஆம் கட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், 4.0 தொடர்பான வழி காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி, வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்கத்திலும் செப் டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். எனினும் பொருளா
தாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன் மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர் வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

 • தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-&பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு
  மற்றும் வெளிமாநிலங்
  களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவ
  தற்கு இ&பாஸ் நடைமுறை
  தொடரும். ஆதார், பயணச்
  சீட்டு மற்றும் தொலை
  பேசி/ அலைபேசி எண்
  ணுடன் இபாஸ் விண்ணப்
  பித்த அனைவருக்கும் முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இபாஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  *அனைத்து வழி
  பாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும். வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம்
  இரவு 8.00 மணி வரை
  மட்டும் அனுமதிக்கப்
  படும்.
 • மாவட்டத்திற்குள் ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்
  குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்
  குவரத்து சேவை 1.9.2020 முதல்,நிலையான வழிகாட்டு நடைமுறை
  களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
 • வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்
  100 சதவீத பணியாளர்
  களுடன், மத்திய அரசின்
  குளிர்சாதன வசதி குறித்த
  வழிகாட்டு நடைமுறை
  களை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  *சென்னை உட்பட
  தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை
  இயங்க அனுமதிக்கப்
  படும்.
 • அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  *சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்
  நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்
  களுடன் இயங்க அனுமதிக்
  கப்படுகிறது.
  எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்
  கொள்ளும் பணியாளர்
  களை தவிர பிற பணியா
  ளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க
  கேட்டுக் கொள்ளப்படு
  கிறார்கள்.
 • தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவல
  கங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு
  அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறை
  களை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ள
  வர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரி
  சோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய
  நடவடிக்கைகள் மேற்
  கொள்ளப்பட வேண்டும்.
 • வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவ
  னங்கள் 100 சதவீத பணி
  யாளர்களுடன் இயங்கு
  வதற்கு அனுமதி
 • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி
  இயங்க அனுமதிக்கப்
  படுகிறது.
 • உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளை
  யாட்டு மைதானங்களுக்கு அனுமதி. ஆனால், பார்வை
  யாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  *நீலகிரி மாவட்டத்
  திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து
  மலை வாசஸ்தலங்
  களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கும் இபாஸ் பெற்று செல்லலாம்.
  *திரைப்படத் தொழிலுக்
  கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறி
  முறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி. ஆனால், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  *ஞாயிற்றுக் கிழமை
  களில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.
 • மாநிலங்களுக்கு இடையேயான இரயில்
  போக்குவரத்து அனுமதிக்
  கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.
  *பள்ளிகள், கல்லூ
  ரிகள், ஆராய்ச்சி நிறுவ
  னங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவ
  னங்களுக்கான தடை தொடர்கிறது.
  *வனிக வளாகங்களில்
  உள்ள திரையறங்குகளுக்
  கான தடை தொடர்கிறது. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்த்துக்கான தடையும் தொடர்கிறது.
 • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது
  போக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கான தடை தொடர்கிறது.