கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

திருவாரூர், ஆக.29&
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி தேர்வு
களும், கல்லூரி தேர்வு
களும் ரத்து செய்யப்பட்
டுள்ளன.
இந்த நிலையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு நடத்துவதில் அரசு முனைப்பு காட்டி
வருகிறது. ஹால்டிக்
கெட்களும் வெளியிடப்
பட்டு விட்டன.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் பட்டது. அந்த வழக்கை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என உத்தரவிட்டனர்.
அதே போல, எந்த
காரணத்தை கொண்டும்
தேர்வு ஒத்திவைக்கப்
படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
7 மாநில முதல்வர்
களுக்கு கடிதம் எழுதியுள்
ளார். நீட் தேர்வை எதிர்ப்
பது உண்மையானால் தமிழக அரசு உச்ச
நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று முன்
தினம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.
தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் முடியும் வரை நீட் தேர்வு
நடத்தக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்
பாடு என்று முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
பல லட்சம் மாண
வர்கள் ஹால் டிக்கெட்டு
களை டவுன்லோடு செய்துள்ளதால் தேர்வுகளை எழுத மாணவர்கள் விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றே மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்
டிரா, பஞ்சாப், ராஜஸ்தான்
ஆகிய மாநில அமைச்
சர்கள், கொரோனா அச்சுறுத்தலால் உச்சநீதி
மன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்
கோரி மனுதக்கால் செய்
துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவாரூரில் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார்.