கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

எந்த விதத்திலும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது (முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்)

நாகை, ஆக.28&
நாகை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
நாட்டினார்.
அதைதொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல்
கட்டுக்குள் இருக்கிறது என்று நாகை ஆட்சியர்
அலுவலகத்தில் முதல்வர்
பழனிசாமி கூறியுள்ளார்.
பணிபுரிகின்ற இடங்
களிலும் சமூக இடை
வெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 7.5 லட்சம் தொழி
லாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நாளன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்
படுகின்றன என்று முதல்
வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும்
எடுக்கப்பட்டுள்ளது என்று
அவர் பேசினார்.
வீடு வீடாகச் சென்று
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் வருவாய், காவல்,
உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும்
பணிகளை செய்கிறது
என்றும் எடப்பாடி பழனி
சாமி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா, ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8 ஆக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு பணி, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனி
சாமி பேசுகையில், உலக
அளவில் கொரோனா தொற்று பரவி மக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்
டுள்ளனர். இந்தியாவிலும் பரவி, தமிழகத்திலும் இந்த தொற்று பரவியது. அதை கட்டுப்படுத்த அரசு முழுமூச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தொற்று நோய் பாதிக்
கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கருதி மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போதிய மருத்துவ கருவிகள் ஏற்படுத்தப்பட்
டுள்ளன.
எங்கெல்லாம் தொற்று
ஏற்படுகிறதோ அங்
கெல்லாம் ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்தில் மட்டும் 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய் தொற்றை தடுக்க முடியும். கடலூர் மாவட்டத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள்உள்ளன.
நோய்க்கு மருந்து இல்லை என்றாலும், மருத்துவர்கள் திறமை
யாக சிகிச்சை அளித்து நோய் தொற்றில் இருந்து குணமடைய செய்
கின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்
சுகாதார பணியாளர்
களுக்குபாராட்டுக்களை தெரிவித்துக் கொள்
கிறேன்.
6.5 கோடி ரூபாய் கொரோனா தடுப்புக்காக கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது” என்றார்.