கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்!” – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறினார் அப்போது அவர், ”ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த போனஸ், வரும் விஜயதசமிக்கு முன் ஒரே தவணையாக, நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து, பொருட்களுக்களுக்கான தேவை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்குவிதமாக அமையும்” என்றார்.