கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ரத்த களரியான பார்லி ராஜ்யசபா! (சபாநாயகர் மைக் உடைப்பு)

சென்னை, செப்.21-
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வீட்டில் உயர் மட்ட குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் தொடர்பான மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான இரண்டு மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மசோதாவின் மீது பேசிய திரிணாமூல் எம்.பி. டெரிக் ஒ பிரையன், விவசாயிகளை எதிர்க் கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் குற்றம்சாட்டுகிறார். வரும் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய விலையை கருத்தில் கொண்டால் வரும் 2028ஆம் ஆண்டு தான் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்று தெரிவதாக குறிப்பிட்டார்.

இந்த மசோதாக்களை நிறைவேற்றும் பொருட்டு குறிப்பிட்ட நேரத்தைவிட அவை நடவடிக்கைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த இடத்தில்தான் பிரச்சினை தொடங்கியது.

மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள், மாநிலங்களவையின் மைய மண்டபத்துக்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கைகளின் நேரலை தொடர்பான ஆடியோ நிறுத்தப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால், அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயாகர் முகத்தில் திரிணாமூல் எம்.பி. டெரிக் ஒ பிரையன் விட்டு எரிந்தார். மேலும், சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளும் நடைபெற்றன.

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, டெரிக் ஒ பிரையனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. ஆனால், இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாமல், இரு மசோதாகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டதாக தூணை சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால், இந்த மசோதாக்கள் மீது போதிய விவாதம் நடக்கவில்லை என்று எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாக்களை விவாதத்திற்கு அனுமதிக்காமல், வாக்களிக்கும் நிலைக்கு வந்து விட்டது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

அத்துடன், விவசாய மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்பில் குளறுபடி நடந்து இருப்பதாகவும், மசோதாவிற்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறியும், ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வீட்டில் உயர் மட்ட குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடு கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.